மதுரை : ஆயுள் கைதி 'அட்டாக்' பாண்டிக்கு 10 நாள் விடுப்பு அளித்த உயர் நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal



மதுரையைச் சேர்ந்த ஆயுள் கைதி 'அட்டாக்' பாண்டிக்கு 10 நாள் சாதாரண விடுப்பு அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டு மதுரையில் உள்ள நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை கொன்ற வழக்கில் 'அட்டாக்' பாண்டிக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. தற்போது மதுரை மத்திய சிறையில் ஆயுள் கைதியாக உள்ள 'அட்டாக்' பாண்டியை பரோலில் விடுவிக்க கோரி அவரது மனைவி தயாளு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில் தயாளு, "மதுரைக் கிளை அமர்வு நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு எனது கணவர் 'அட்டாக்' பாண்டிக்கு நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த 5 வருட காலமாக எனது கணவர் மதுரை மத்திய சிறையில் உள்ளார். 

இதனிடையே எனக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மேற்படி மருத்துவ செலவுக்காக எனது கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்க வேண்டும். எனவே மத்திய சிறையில் உள்ள எனது கணவர் 'அட்டாக்' பாண்டியை 1 மாத காலத்திற்கு பரோலில் விடுவிக்க கோரி சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன். ஆனால் அதை நிராகரித்து விட்டனர். 

எனவே அதை ரத்து செய்து எனது கணவரை 10 நாள் பரோலில் விடுவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் டி. ஜெகதீஷ் சந்திரா, ராஜசேகர் ஆகியோர், 'அட்டாக்' பாண்டி பரோலில் சென்ற பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் 10 நாள் பரோல் அளிக்க உத்தரவிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai High Court Branch Orders For Lifer Attack Pandi to go in 10 Days Parole


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->