செயற்கை நீர்வீழ்ச்சியுடன் இயங்கும் சொகுசு விடுதிகளை மூட மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பொதுமக்கள் இயற்கை நீர்வீழ்ச்சியை மறக்கும் விதமாக செயற்கையான நீர்வீழ்ச்சிகளை தயார் செய்து செயல்படும் சொகுசு விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்த வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றாலம் பகுதிகளில் செயற்கையான முறையில் நீர்வீழ்ச்சியை உருவாக்கி செயல்படும் தனியார் சொகுசு விடுதிகளை உடனடியாக மூட வேண்டும். 

இதேபோன்று, குற்றாலத்தில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், ஊட்டி மற்றும் குமரி மாவட்டங்களிலும் செயற்கை நீர்வீழ்ச்சி விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai highcourt order to artificial wterfall hotels


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->