மதுரை ஜல்லிக்கட்டு போட்டி; மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்
Madurai Jallikattu competition Bookings for bullfighters begin tomorrow
தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் தைத்திருநாளை முன்னிட்டு வீரம் மிகுந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை (06.01.2025) மாலை 5.00 மணி முதல் ஜன 07-ம் தேதி மாலை 05 மணி நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இதில் முக்கியமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாடுபிடி வீரர்கள் மற்றும் கலந்து கொள்ளும் மாடுகளின் பதிவுகளை madurai.nic.in இணையதளம் மூலம் பெயர்கள், மாடுகளின் விவரங்களை பதிவு செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
போட்டியின் விதிமுறைகள்:
01- ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 03 கிராமங்களில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
02- ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
03- பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்கள்:
அவனியாபுரம் : ஜனவரி -14
பாலமேடு : ஜனவரி - 15
அலங்காநல்லூர் : ஜனவரி -.16
English Summary
Madurai Jallikattu competition Bookings for bullfighters begin tomorrow