மதுரையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த துயரம்!...தூங்கிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


மதுரை அருகே, பள்ளி மாணவி தூங்கிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கரடிபட்டியை சேர்ந்தவர் அங்காள ஈஸ்வரி என்ற மாணவி. 13 வயதான இவர் வடபழஞ்சியில் உள்ள  அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவர் தனது இல்லத்தில் வழக்கம் போல் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்து உள்ளார். அப்போது,  சிறுமி  அங்காள ஈஸ்வரியை விஷப்பாம்பு கடித்த நிலையில், அவரது பெற்றோர்கள் அச்சம் அடைந்தனர். மேலும், உயிருக்கு போராடிய அங்காள ஈஸ்வரியை அவரது குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருந்த போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி அங்காள ஈஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி தூங்கிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai school girl tragedy she was bitten by a snake while she was sleeping


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->