மதுரையில் சோகம்: நின்றிருந்த சுற்றுலா ரயிலில் திடீர் தீ விபத்து! 5 பேர் பலி! - Seithipunal
Seithipunal


மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் பற்றி எரிந்ததில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

மதுரை ரயில் நிலையத்தில் லக்னோ-ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதில் இருவர் உத்தர பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் விவரங்கள் தெரியவில்லை. 

இந்த பயங்கர தீ விபத்து நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்டால் தீ வேகமாக பரவி எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுரை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் போலீசார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்டமாக இந்த தீ விபத்து சிலிண்டர் வெடித்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

தீ விபத்தின் போது பொருள்கள் எரிந்து பின்னர் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்ததால் தீ பரவியிருக்கலாம் என பல்வேறு கோணங்களில் இருந்து கருத்து வெளியாகி வருகிறது. 

இந்நிலையில் முழுமையான விசாரணைக்கு பிறகு ரயிலில் பற்றியதற்காக காரணம் தெரிய வரும். எனினும் தீயணைப்பு படை வீரர்கள் பயங்கர தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai stopped tourist train sudden fire accident 5 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->