மதுரை : போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண்கள்!...அங்கேயே உணவு சமைத்து தொடர் போராட்டம்! - Seithipunal
Seithipunal


மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக, விமானம் நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள 136 வீடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைக்காக இன்று காலையில் அதிகாரிகள் அங்கு குவிந்தனர். மேலும் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை உள்ளே நுழைய மறுத்து, தங்களுக்கு மீள் குடியமர்வு, 3 சென்ட் நிலம் மாநகராட்சி இடத்திற்குள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமத்திற்குள் வர அதிகாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக 4-வது நாளான இன்று அங்கு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி பொதுமக்கள் சாலையில் படுத்து போராடி வருகின்றனர். மேலும், போராட்டம் நடைபெறும் இடத்திலேயே அங்கு உள்ள பொதுமக்கள் உணவு சமைப்பதற்காக பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அங்குள்ள பெண் ஒருவர் போராட்டத்தின் போது மயங்கி விழுந்த நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai women who fainted in protest continued struggle by cooking food there


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->