நீதிமன்றத்தை மதிக்காத அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யுங்க! சாட்டை சுழற்றும் மதுரை கிளை! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த நபர் உடல்நிலை குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ செலவு ரூ.9 லட்சம் மேல் ஆகும் என்பதால் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.

அந்த மனு திருநெல்வேலி மாவட்ட மருத்துவ அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து செல்ல உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்து 2016ம் ஆண்டு வழக்கு தொடங்கி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற தலைமை மருத்துவ காப்பீடு வணங்குமாறு உத்தரவிட்டது. 

ஆனால் மாவட்ட மருத்துவர் அதிகாரிகள் நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றாததால் அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி பட்டு தேவானந்த் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. 

இந்த அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தை அடுத்து அவர் இன்று நேரில் ஆஜரானார்.

அப்போது நீதிமன்றத்தில் அனுமதிக்காமல் பணியில் உள்ள அரசு அதிகாரிகளை சரி செய்ய வேண்டிய உள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளில் ஒருவரையாவது டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்"என நீதிபதிக்குரிய கருத்து அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மருத்துவ காப்பீடு தொடர்பான ஆவணங்களை தொலைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC opinion to dismiss govt officers disobeying court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->