அரசு அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும்! மதுரை உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறையில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் இடையே உள்ள முரண்பாடு தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக தற்காலிக பணியாளர்களுக்கு சமமான ஊதியம் வழங்க மறுப்பது மற்றும் வழங்க தாமதிப்பது குறித்து தனது கண்டனத்தை முன் வைத்துள்ளது.

குறிப்பாக போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த ஊதியத்தைத் தாமதிப்பது வழங்க மறுப்பது நல்ல செயல் அல்ல. அவர்கள் செய்த பணிக்கு உரிய ஊதியத்தை மட்டுமே கேட்கின்றனர். தற்காலிக பேருந்து ஓட்டுநர்களுக்கும், நிரந்தர பேருந்து ஓட்டுநர்களும் பேருந்துகளை இயக்குவதில் ஏதாவது வேறுபாடு உள்ளதா?

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவும், அதனை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளைச் சிறைக்கு அனுப்ப நேரிடும். நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை என்பது நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றும் விதத்தில் தான் உள்ளது என தனது அதிருப்தியை வெளிப்படுத்திய மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC warned govt officials who not implement court order face jail


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->