மதுராந்தகம் அருகே கொடூர விபத்து., பலமணி நேர போராட்டம்., உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு : மதுராந்தகம் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது, மற்றொரு லாரி மோதிய விபத்தில், ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும்m அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பழுதாகி நின்ற கண்டைனர் லாரி மீது, தேங்காய் பாரம் ஏற்றி வந்த மற்றொரு லாரி மோதி இன்று காலை விபத்துக்குள்ளாகியது. இந்த கொடூர விபத்தில் தேங்காய் பாரம் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர் உடல் நசுங்கி கொடூரமான முறையில் உயிரிழந்தார்.

இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர், கனரக வாகனம் சாலையில் சென்று கொண்டிருப்பதாக நினைத்து, கவனக்குறைவாக லாரியை இயக்கதில், நின்றுகொண்டிருந்த அந்த கண்டைனர் லாரி மீது தேங்காய் பாரம் ஏற்றி வந்த இந்த லாரி மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக போலீசார் தரப்பில் முதல் கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரியின் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்ததால், இரண்டு லாரிகளுக்கும் இடையில் லாரியின் ஓட்டுநர் சிக்கி உடல் நசுங்கி கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maduranthakam lorrys accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->