மயிலாடுதுறையில் கலெக்டர் முன்னிலையில் குறைதீர் கூட்டம்! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில், இந்த (ஜூன்) மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறும் என மயிலாடுதுறை  மாவட்ட கலெக்டர் மகாபாரதி செய்தி வெளியிட்டுள்ளார்.  

இக்கூட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தலைமை தங்கி நடத்தவுள்ளார். இதில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறலாம்.

அனைத்து விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம் 

வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை போன்ற துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம், என தெரிவித்திருந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mailaduthurai calector farmers grievance meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->