சீர்காழி || விசாரணைக்கு அழைத்த போலீசாரைக் கட்டையால் தாக்கிய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே மேல வரவுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் ஜாகர். வேலைக்கு செல்லாத இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், ஜாகர் நேற்று மாலை குடித்துவிட்டு வந்து தாய் தமிழ்ச்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் போதை தலைக்கு ஏறியதால் ஜாகர் தனது தாயை தாக்கியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் காவல்நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கலைமணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஜாக்கரை விசாரணைக்கு அழைத்தனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த அவர் அருகில் இருந்த வேலி கட்டையை எடுத்து போலீசாரை தாக்கியுள்ளார். இதில், பலத்தக் காயமடைந்த காவல் ஆயவளர் சீனிவாசன் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for attack police officer in seerkazhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->