வேலூரில் பரபரப்பு - கோவில் திருவிழாவில் மூன்று பேருக்கு கத்திக்குத்து.!! - Seithipunal
Seithipunal


இன்று ஆடி கிருத்திகை திருவிழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியர் தெருவில் நேற்று இரவு சாமி வீதியுலா நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர் நடனமாடி வந்தனர்.

அப்போது போட்ட பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாணி தெருவை சேர்ந்த ராஜேஷ், அரவிந்தன், கார்த்திகையின் உள்ளிட்டோர் சிவகுமாரை தட்டி கேட்டுள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த சிவகுமார் தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மூன்று பேரையும் வெட்டி உள்ளார். இதில் மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பொதுமக்கள் வருவதை பார்த்த சிவகுமார் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதை அடுத்து பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பித்து ஓடிய சிவகுமாரை தீவிரமாக தேடி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for attack youths in vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->