ஆப் மூலம் பழகி ஓரின சேர்க்கையாளர்களை மிரட்டி பணம், நகை பறித்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் GRINDR - GAY CHAT APPS மூலம் CHAT செய்து ஓரினச்சேர்க்கையாளர்களை அழைத்து மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி, இந்த சம்பவம் நடைபெறாமல் தடுப்பதற்கு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெக்கலூர் பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் திருப்பூர் வஞ்சிபாளையம் சௌடாம்பிகா நகரில் வசித்து வரும் சுரேஷ் மகன் கிஷோர்குமார் என்பது தெரியவந்தது. மேலும், போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் பல சுவாரசிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது, கிஷோர் குமார் GRINDR - GAY CHAT APPS யை பயன்படுத்தி ஓரினச் சேர்க்கையாளர் போல் நடித்து பலருடன் மெசேஜ் செய்துள்ளார். அதன் பின்னர் அந்த நபர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து அவர்களை அடித்து மிரட்டி அவர்களிடம் உள்ள பணம், நகை மற்றும் செல்போன்களை பறித்துள்ளார்.

இதேபோல், ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் செயலியை பல நபர்கள் பயன்படுத்தி பலரிடம் நடித்து அவர்களை ஏமாற்றி நகை மற்றும் பணங்களை பறித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட பலரையும் தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for extorting money and gold to gays


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->