பொள்ளாச்சி || சேர்ந்து வாழ மறுத்த மனைவி - 17 இடங்களைக் குறிவைத்து கணவன் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


சேர்ந்து வாழ மறுத்த மனைவி - 17 இடங்களைக் குறிவைத்து கணவன் செய்த கொடூரம்.!
 
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் - கற்பகம் தம்பதியினர். இவர்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன. இருப்பினும், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், ஆறுமுகம் கடந்த சில நாட்களாக பொள்ளாச்சிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது கற்பகத்தை சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால், கற்பகம் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் இரவு தொப்பம்பட்டியில் உள்ள கற்பகத்தின் வீட்டின் அருகே அவரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 17 இடங்களில் குத்திக்கொலை செய்துள்ளார்.

மறுநாள் காலையில் அந்தவழியாகச் சென்ற அப்பகுதி மக்கள் கற்பகம் ரத்த வெள்ளத்தில், உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார், ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill wife in coimbatore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->