திருமணம் செய்வதாக மோசடி - கையும் களவுமாக சிக்கிய பட்டதாரி வாலிபர்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் வணங்கனேந்தல் ரயில்வே பீடர் சாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. வேலைத் தேடி வரும் இவர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி கிடந்ததுடன், பல்வேறு மேட்ரிமோனி தளங்களில் வேறு வேறு பெயர்களில் புதுமணப்பெண் என்பதற்கு பதிலாக கணவனை இழந்தோர் மற்றும் இரண்டாவது திருமணம் செய்ய பதிவு செய்த பெண்களுக்கு விருப்பம் தெரிவித்து பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்தப் பொய்யான தகவல்களைப் பார்த்து ஏராளமான பெண்கள் விருப்பம் தெரிவித்த நிலையில், கார்த்திக் ராஜா அப்பெண்களின் செல்போன் மற்றும் சுயவிவரங்களை பணம் கட்டிப் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் மதுரை, விருதுநகர், சிவகாசி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கணவனை இழந்தோர் மற்றும் இரண்டாவது திருமணத்திற்காக பதிவுசெய்த பெண்களிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். 

இதையடுத்து, கார்த்திக் ராஜா அந்த பெண்களிடம் திருமணத்திற்கு முன்பு சந்திக்க வேண்டும் என்று கூறி, தனியாக வர வழைத்து அவர்களிடமிருந்து நகைகளை வாங்கியுள்ளார். அதன் பிறகு, அந்த பெண்களின் தொடர்பைத் துண்டித்ததோடு, சிம் கார்டுகளையும் மாற்றுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்த நிலையில், கார்த்திக் வழக்கம் போல் மோட்ரிமோனி தளத்தில் அறிமுகமான சில பெண்ணை அழைத்துக்கொண்டு மதுரையில் உள்ள பிரபலமான மால் ஒன்றிற்கு சென்று வழக்கம் போல் பேசி பேசி நகைகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்தது தப்பித்துச் சென்றுள்ளார். 

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சில பெண்கள் கார்த்திக் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கார்த்திக் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் இருந்து 14 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மதுரை மட்டுமல்லாது, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for money and gold fraud in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->