நாமக்கல் || நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து - பைக்; ஒருவர் உயிரிழப்பு.!
man died for accident in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ரெயில்வே மேம்பாலத்தில் நேற்று இரவு சேலம் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனமும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த கோர விபத்தில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தின் போது தனியார் பேருந்து ஒன்று விபத்தை தடுக்க சடன் பிரேக் அடித்ததால், பின்னே வந்த இரண்டு வாகன ஓட்டிகள் பேருந்தின் பின்புரம் மோதி காயமடைந்தனர்.

இந்த நிலையில், இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man died for accident in namakkal