கடலூர் || மனைவிக்கு இளநீர் பறிக்கச் சென்ற கணவர் - நொடியில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அடுத்த தெற்கு திட்டைகிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் ஆனந்தராஜ். வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக தங்கி வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நீதிகா, சேத்தியாத்தோப்பு அருகே ஓடாக்கநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், ஆனந்தராஜ் நீதிகாவை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் தனது மாமியாா் வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் தனது மனைவிக்காக இளநீா் பறிக்க வீட்டின் பின்புறத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து கொட்டகைக்கு சென்ற மின்ஒயரில் சிக்கினார்.

இதனால், அவர் மீது மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆனந்தராஜை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died for electric shock attack in cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->