பையில் இருந்த செல்போன் வெடித்து அரசு ஊழியர் மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


பையில் இருந்த செல்போன் வெடித்து அரசு ஊழியர் மருத்துவமனையில் அனுமதி.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில், இசக்கியப்பன் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளராக, திருநெல்வேலியில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இசக்கியப்பன் நேற்று காலை உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது உறவினரைப் பார்ப்பதற்காக ஆறுமுகநேரிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென அவரது மேல்சட்டை பையில் வைத்திருந்த ஸ்மார்ட் போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. 

இந்த விபத்தில் இசக்கியப்பனுக்கு இடது மார்பு, முகம் மற்றும் தாடை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதில் வலியால் அலறிதுடித்த இசக்கியப்பனை, உறவினர்கள் சிகிச்சைக்காக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man injured for cell phone explossion in thiruchendur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->