நாகர்கோவிலில் பரிதாபம் - அறிவுரை வழங்கிய நண்பனை குத்திக் கொன்ற வாலிபர்.! - Seithipunal
Seithipunal


நாகர்கோவிலில் பரிதாபம் - அறிவுரை வழங்கிய நண்பனை குத்திக் கொன்ற வாலிபர்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே கைலாஷ்கார்டன் முதல் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் கிணறு அருகே இஸ்ரோ மையத்தில் தற்காலிக கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். 

அதே சமயம், வெளிநாட்டுக்குச் செல்வதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய நண்பர் பேச்சி என்ற இசக்கிமுத்து. இவர் குடிநீர் கேன் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இசக்கிமுத்துவிடம் அதனை விட்டுவிடும்படி மனோஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மனோஜ் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன்கோவில் வடக்கு ரத வீதியில் தெப்பக்குளத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது, அந்த வழியாக திடீரென வந்த இசக்கிமுத்து மனோஜை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து தான் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் மனோஜின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி விட்டுத் தப்பித்துச் சென்றுள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மனோஜை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மனோஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man kill friend in nagarkovil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->