மதுபான கடை காசாளர் கொலை.. முன்விரோதத்தால் கொலையா? காவல்துறையினர் விசாரணை..!
Man Killed In Sivakangai
டாஸ்மார்க் காசாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவங்கை மாவட்டம், கண்டானபட்டியை சேர்ந்தவர் காளையப்பன். இவர் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள மதுபான கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். சம்பவதன்று அவர் மதுபான கடைக்கு சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் மதுபான கடைக்கு வந்த அவர்கள் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினர். தலை இரண்டாக பிளந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடனடியாக அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். தகவல்றிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முன்விரோதத்தில் தான் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.