வளர்ப்பு கிளியை காணவில்லை.. போஸ்டர் ஓட்டி தேடும் பாசக்கார குடும்பம்..! - Seithipunal
Seithipunal


காணமால் போன பச்சைகிளியை போஸ்டர் ஒட்டி தேடி வருகின்றனர்.

மதுரை தெற்கு வெளியை சேர்ந்தவர் சுப்புராமன். இவரின் வீட்டில் கடந்த  சில மாதங்களாக வெல்வெட் என்ற பச்சைகிளியை வளர்த்து வருகின்றனர். அந்த கிளியை குடும்பத்தினர் மிகவும் பிரியமாக வளர்ந்து வந்தனர். கடந்த 20-ந் தேதி வீட்டின் கதவு திறந்து இருந்ததால் கிளி அங்கிருந்து வெளியே பறந்து சென்றுவிட்டது.

கிளி மாயமானதால் சுப்புராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.  கிளியை காணவில்லை என மதுரை மாநகர் முழுவதும் கிளியின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.  போஸ்டரை பார்த்து விட்டு சிலர் தகவல் அளித்தாலும் இன்னும் கிளியை கண்டுபிடிக்க வில்லை என தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி சுப்புராஜ் கூறும் போது, வெல்வெட் குடும்பத்தினர் மிகவும் பாசமாக வளர்த்து வந்தனர். பெயரை சொல்லி அழைத்தால் குரல் கொடுக்கும். அது ஒரு பெண் கிளி. அது கிடைக்காதது குடும்பத்தினர் மனதை மிகவும் வேதனையளிக்கிறது. சீக்கிரம் கிளி  கிடைத்து விடும் என நம்புவோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Searching parrot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->