நெய்வேலி || மின்சார பெட்டியில் படுத்துக் கிடந்த போதை ஆசாமி - நெய்வேலியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உயர் கோபுர மின் விளக்கு கம்பத்துக்கு மின்சாரம் செல்லக்கூடிய பெட்டி மீது மதுபோதையில் ஒரு நபர் படுத்துக் கிடக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மது போதையில் குடிமகன்கள் பொது இடங்களில் பேருந்துகளை மறிப்பது, நடு ரோட்டில் படுத்துக் கிடப்பது, அரைகுறை ஆடையில் சுற்றுவது என்று இவர்களின் செயல்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மின்சாரம் கம்பம் அமைந்துள்ள ரவுண்டானா பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் செல்லக் கூடிய பெட்டி மீது மது போதையில் ஒரு நபர் படுத்துக் கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த போதை ஆசாமி உயர் அழுத்த மின்சாரம் செல்லக் கூடிய பெட்டியின் மீது உயிர் குறித்து எவ்வித அச்சமும் இல்லாமல் படுத்துக் கிடந்ததால் அவர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man sleep electricity box in neiveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->