மறுமணம் செய்வதாக நடித்து.. இளம்பெண்களிடம் கைவரிசை.. மன்மத மாப்பிள்ளையை கொத்தாக தூக்கிய போலிஸ்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்ட பகுதியை சேர்ந்தவர் ஜான்சி ராணி (20). அவளுக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் ஜான்சி ராணி தனது தாயாரின் அறிவுறுத்தலின் பேரில் திருமண தகவல் மையத்தில் மறுமணம் செய்ய பதிவு செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து பரமக்குடியை சேர்ந்த கார்த்திக் ஆரோக்கியராஜ் என்பவர் ஜான்சி ராணியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தனியார் வங்கி ஊழியர் என்றும், திருமணமாகி விவாகரத்து செய்தவர் என்றும், உன்னை மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

அவர் சொன்னதை நம்பிய ராணி, கார்த்திக்கிடம் தொடர்ந்து பேசி, கடைசியில் நேரில் சந்தித்தாள். அப்போது திருமணத்திற்கு தான் செயின் வாங்கி வந்ததாக கூறி பரிசாக கொடுத்துள்ளார்.

பின்னர் ஜான்சி ராணியின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் நகையை கார்த்திக் ஆரோக்கியராஜ் டாலர் போட்டு தருவதாக கூறி 5 பவுன் நகையை வாங்கி கொண்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கார்த்திக் ஆரோக்கியராஜ் திரும்பி வராததால் சந்தேகமடைந்த ஜான்சி ராணி பல இடங்களில் தேடிப்பார்த்தார்.

இந்நிலையில், கார்த்திக் ஆரோக்கியராஜ் கொடுத்த நகைகள் போலி என அறிந்த ஜான்சிராணி, போலீசில் புகார் அளித்தார். கார்த்திக் ஆரோக்கியராஜ் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை கைது செய்தனர். விசாரணையில் கார்த்திக் ஆரோக்கியராஜ் பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து தருவதாக கூறி தங்க நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது.

திருமணமாகி கணவனை இழந்த திருமணமான பெண்களை விவகாரத்து செய்து, அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து நகைகளை வாங்கிச் சென்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man stole 5 pounds of jewelry saying that he would remarry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->