கண்முன்னே உயிரிழந்த மனைவி - துக்கத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


சென்னையை சேர்ந்தவர்கள் ராம்பிரகாஷ் - வெண்ணிலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இதில், வெண்ணிலாவுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்ததால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வெண்ணிலா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த ராம்பிரகாஷ் துக்கம் தாங்காமல், என் மனைவி சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன் என்று கதறியபடி அங்கிருந்து வேகமாக வெளியே சென்றார். இந்த நிலையில், திருச்சி - கரூர் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் உள்ள தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் தூக்கிட்டு இறந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், உயிரிழந்தது பெயிண்டர் ராம்குமார் என்பது தெரிய வந்தது.

மேலும், அவர் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மனைவி இறந்த துக்கம் தாளாமல், கணவன் தூக்கிட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man sucide after wife died in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->