உப்பாய் இருந்த உப்புமா.. தண்ணீராய் ஓடிய சாம்பார் - சமையலரை வெளுத்து வாங்கிய திமுக எம்.எல்.ஏ.!  - Seithipunal
Seithipunal


உப்பாய் இருந்த உப்புமா.. தண்ணீராய் ஓடிய சாம்பார் - சமையலரை வெளுத்து வாங்கிய திமுக எம்.எல்.ஏ.! 

இன்று முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே ஆலம்பச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைப்பதற்காக மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி வருகை புரிந்திருந்தார். 

அப்போது அவர் திடீரென பள்ளியின் சமயலறைக்குள் நுழைந்து அங்கு தயாராகிக் கொண்டிருந்த உணவை சுவைத்துப் பார்த்தார்.அப்போது அவர் உப்புமாவில் உப்பு அதிகமாக இருப்பதையும், பின்னர் சாம்பாரை சோதித்து பார்த்த போது அதில் அதிக அளவு தண்ணீராக இருப்பதையும் கண்டார்.

இதையடுத்து அவர் உணவை தயார் செய்த சமையலரை திட்டியுள்ளார். இதனால், பதறிப்போன அந்த சமையலர், முதல் நாள் என்பதால் தவறு நேர்ந்ததாகவும், இனி சரியாக சமைப்பதாகவும் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவினை சாப்பிட்டார். 

அந்த நேரத்தில், அங்கு வந்திருந்த ஒரு வயது குழந்தையை தனது மடியில் அமர வைத்து அந்த குழந்தைக்கும் உணவினை ஊட்டியுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manadurai mla chek morning food scheme in school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->