மருதமலை கோவில் வெள்ளி வேல் திருட்டு - சாமியார் கைது.!!
maruthamalai subramaniya swami temple priest arrest for silver vel steal
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. முருகப் பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படும் இந்த கோவிலில் கடந்த நான்காம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மருதமலை அடிவாரத்தில் உள்ள வேல் கோட்டம் தியான மண்டபத்தில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இந்த மண்டபத்தில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி உயரமுள்ள வெள்ளியால் செய்யப்பட்ட, சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான வேல் இருந்தது.

இந்த வேலை கடந்த 2ம் தேதி பிற்பகல் சுமார் 12 மணி அளவில் சாமியார் வேடத்தில் வந்த திருடன் எடுத்துச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இந்தச் சம்பவம் குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றிய வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வெள்ளி வேலை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், மருதமலை கோவில் மலை அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேலை திருடிச் சென்ற சாமியார் வெங்கடேஷ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
maruthamalai subramaniya swami temple priest arrest for silver vel steal