அட்டைப்பெட்டியில் குழந்தை.!! துறையின் தவறு இல்லை.!! அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம்.!!
MaSubramanian explain baby death body handover in cardboard box
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை அட்டைப்பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத் துறை மீது எந்த தவறும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அட்டைப்பெட்டியில் குழந்தை வைத்து கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை அட்டைப்பெட்டியில் வைத்து பெற்ற விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது எந்த தவறும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தையின் தந்தை தானே இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் செய்ய முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளார். இயற்கை முறையில் சிகிச்சை காரணமாகவே பச்சிளம் குழந்தை இறந்து பிறந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை காப்பாற்ற சம்பந்தப்பட்ட நபரே தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். புயல் மற்றும் வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாப்பிற்காக தனியார் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
அதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறையின் தவறு ஏதும் இல்லை. குழந்தையின் தந்தை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என வலியுறுத்தியதன் அடிப்படையில் குழந்தை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அட்டைப்பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது தவறானது என்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
MaSubramanian explain baby death body handover in cardboard box