தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா.? சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏராளமான குழந்தைகள் இன்ஃப்ளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் மருந்து இருப்பு நிலவரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. ஒரு சிலர், மருந்து தட்டுப்பாடு இருப்பது போன்ற பொய்யான தகவல்களை வெளியிடுகின்றனர்.

மேலும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கு அவசியம் இல்லை.

மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ma.subramanian speech about influenza virus and school holiday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->