திருவண்ணாமலை : சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்.. 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 

மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் சித்திரை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நாளை மறுநாள் வியாழக்கிழமை இரவு 11.59 மணிக்கு தொடங்கி மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகின்றது. 

இந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். மேலும், பக்தர்கள் கிரிவலம் செல்வதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May 4 and 5 tasmac closed in thiruvannaamalai district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->