சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேயர் பிரியா நேரில் ஆய்வு.! - Seithipunal
Seithipunal


சென்னை முகலிவாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர்கள் நாள்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் பொது மக்களுக்கு தேவையான வசதிகளையும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் இன்று வடசென்னை பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளரிடம் பேசிய அவர் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர் கொள்ள அரசு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayor Priya inspected rain flood areas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->