மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை..அமைச்சர் கே.என்.நேரு உறுதி! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை `டங்ஸ்டன்' சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இன்றைய நிகழ்வில் தமிழகம் முழுவதும் மாடுகள், நாய்கள் தொலையால் மக்கள் அவதி அடைந்துள்ளனர் என்று இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து கூறியதாவது:-தமிழ்நாட்டில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது; சென்னையில் உள்ளதைபோல் நாய்கள் இன கட்டுப்பாட்டு மையத்தை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க உள்ளோம். நாய்கள் தொல்லை குறித்த புகார்களுக்கு மாநகராட்சிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிராணிகள் வதை சட்டத்தில் நாய்கள் மற்றும் மாடுகளை முழுமையாக அகற்ற வழியில்லை. சில இடங்களில் மடுகளை பிடித்தால் அதன் உரிமையாளர்கள் கோபமடைகின்றனர். மாடுகள், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அனைத்து மாநகராட்சி, நகராட்சிஆணையர்களிடம்நடவடிக்கைஎடுக்கஉத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Measures to control the nuisance of cattle and dogs Minister K.N. Nehru confirmed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->