மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை - தீவிர விசாரணையில் போலீசார்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் மகள் சுகிர்தா. இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி முதுநிலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில், சுகிர்தா நேற்று கல்லூரிக்கு செல்லாததால், அவரது தோழிகள் அவரை தேடி விடுதி அறைக்கு சென்றனர். அங்கு சுகிர்தா மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். உடனே மருத்துவர்கள் விரைந்து வந்து சுகிர்தாவை பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து மருத்துவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த போலீசார் சுகிர்தாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் மாணவியின் அறையில் இருந்த ஊசி, மருந்து மற்றும் தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதிய கடிதம் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

medical college student sucide in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->