அதிரடியாக உயர்ந்த மருந்துகளின் விலை - இதோ முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


ஆன்டிபயாடிக், வலி நிவாரணி போன்ற அத்தியாவசிய மருந்துகளின் விலை, இன்று முதல் உயரும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விலையின் கீழ் பாராசிட்டாமல், அசித்ரோமைசின், வைட்டமின், மினரல்ஸ் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:- ”பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் என 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் வருடாந்திர மாற்றத்திற்கு ஏற்ப, அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலின் கீழ், அத்தியாவசிய மருந்துகளின் விலையை 0.0055% அதிகரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னதாக, மருந்துகளின் விலை கடந்தாண்டு 12 சதவீதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவீதமும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

medicines cost increase


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->