முதல்வர் குறித்து அவதூறாக பேசிய மீரா மிதுன்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும், அவரது பதிவுகளை நீக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகை மீரா மிதுன் முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் ஆடியோ பதிவிட்டதாக கூறும் நாளில் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், என் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இவரது மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meera Mithun speech about TN CM controversy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->