மேல்மருவத்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்! பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி!  - Seithipunal
Seithipunal


பக்தர்களால் 'அம்மா' என அழைக்கப்பட்டு ஆன்மீகப் பணியாற்றி வந்தவர் பங்காரு அடிகளார். இவர் கடந்த ஒரு ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் பங்காரு அடிகளார் நேற்று மாலை 5 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். இவரது மரணம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மேல்மருவத்தூர் குவிந்த வண்ணம் உள்ளனர். 

அதேபோல் ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகின்றனர். 

பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்து கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்துகின்றனர். இதற்கிடையே புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டா தலைவர்களும் பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Melmaruvathur devotees gathered homage body bangaru adigalar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->