சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! ஆவடி-கோயம்பேடு இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை! - Seithipunal
Seithipunal


சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சென்னை புறநகர் பகுதிகளையும் இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய புறநகர் பகுதிகளை சென்னையின் மையப் பகுதியுடன் இணைக்கும் வகையில் புறநகர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான சாத்திய கூறுகளை மெட்ரோ நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.

அதன்படி சென்னையின் முக்கிய பகுதியான கோயம்பேட்டிற்கும் ஆவடிக்கும் இடையே மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கையானது விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் ஆவடிக்கும் சென்னை கோயம்பேட்டிற்கும் இடையேயான புறநகர் மெட்ரோ ரயில் வழிதடத்திற்கான அறிக்கையை தயார் செய்யும் பணியில் மும்முறமாக ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. அந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கோயம்பேட்டிற்கும் ஆவடிக்கும் இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metro going to submit feasibility report to TNgovt in Koyambedu Avadi project


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->