#தமிழகம் || காதலித்த மனைவி., கட்டிலில் போலீஸ்காரர்.! உருட்டுக்கட்டையால் பொளந்துகட்டிய சம்பவம்.!
mettupalaiyam husband attack wife
கடந்த 8 எட்டு வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரியும், மூர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே, ராஜேஸ்வரி தனது கணவரை பிரிந்து, மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள தாய் வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.
அப்போது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் துரைப்பாண்டி என்பவருக்கும், ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று துரைப்பாண்டியும், ராஜேஸ்வரியும் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த ராஜேஸ்வரியின் கணவர் மூர்த்தி, விறகு கட்டையை எடுத்து போலீஸ்காரர் என்று பார்க்காமல் துரைப்பாண்டியையும், ராஜேஸ்வரியையும் சரமாரியாக தாக்கினார்.
தனக்கு அடி விழுந்தாலும் பரவாயில்லை துரைப்பாண்டி காப்பாற்ற நினைத்த ராஜேஸ்வரியை மேலும் அடித்து அடித்து உதைத்துவிட்டு மூர்த்தி தப்பி ஓடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த துரைப்பாண்டி, ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பெற்ற மகளை தனக்கு தெரியாமல் தாய் வீட்டுக்கு அழைத்து சென்றதால், ஆத்திரத்தில் இருவரையும் மூர்த்தி தாக்கியதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள மூர்த்தியை கைது செய்ய தேடி வருகின்றனர்.
English Summary
mettupalaiyam husband attack wife