மிக்ஜம் புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண தொகை அறிவித்த தமிழக அரசு!
Mikjam cyclone relief fund announced
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சென்னை மக்கள் சிக்கி அவதி அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட வெள்ளம் காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அரசு மிக்ஜம் புயல் வெள்ளத்திற்கு ரூ. 6000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மிக்ஜம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் எனவும் இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிவாரணத் தொகை நியாய விலை கடைகள் மூலம் ரொக்க பணமாக வழங்கப்படும். புயல் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 8000 எருது, பசு போன்ற கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ. 37 ஆயிரத்து 500 வரை நிவாரணமாக வழங்கப்படும்.
மேலும் சேதமடைந்த பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ரூ. 22,500 மற்றும் மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 8,500 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Mikjam cyclone relief fund announced