சாலை அருகே வயல்வெளியில் மினி வேன் கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம் - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை அருகே வயல்வெளியில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று திறன் மேம்பாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஏராளமானோர் வந்திருந்தனர்.

இந்நிலையில் மேலபுஞ்சை கிராமத்தில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சி முடிந்து மினி வேனில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது புதுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலையின் அருகே இருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாகவும், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து புதுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mini van overturned in a field near the road in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->