டெட்ரா பாக்கெட்டில் கட்டிங்.. காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடை ஓபன்.? அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு.!!
Minister announced Tasmac shop morning open in considering
மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி "அப்போது பேசிய அவர் "தமிழகம் முழுவதும் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் ஒரு சில கடைகளில் மட்டுமே தவறு நடைபெறுகிறது அதை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சனை சரி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
டாஸ்மாக் பார் பொறுத்தவரை யாருக்கெல்லாம் உரிமை வழங்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டும் தான் பார் நடத்த முடியும். உரிமம் வழங்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதிகாரிகள் அதற்குண்டான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் சில டாஸ்மாக் கடைகளில் பார் தற்பொழுது மூடப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு முடிந்தவுடன் அந்த இடங்களுக்கும் டாஸ்மாக் பார் தொடங்க அனுமதி கொடுத்து விட்டால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். எங்களுக்கு டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பது நோக்கம் அல்ல.
டாஸ்மாக் கடைகளில் பாட்டில்கள் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் சிரமங்களை பிரச்சனைகளை குறைக்க டெட்ரா பாக்கெட் கொண்டு வருவதை டாஸ்மாக் பணியாளர்கள் சங்கமும் பொதுமக்களும் வரவேற்கின்றனர். எனவே அது தொடர்பான நடவடிக்கைகளை துறையின் சார்பாக எடுத்துள்ளோம்.
அதேபோன்று 90ML அளவுகளில் மதுபானம் விற்கவும் முடிவு செய்துள்ளோம். தற்பொழுது அனைத்து டாஸ்மாக் கடைகளும் அன்பர்கள் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் கோரிக்கையும் எழுந்துள்ளது. அதைப்பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆனால் அதன் மீது இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆனால் அதற்கான மாற்று வழியை நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister announced Tasmac shop morning open in considering