பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா..? இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் பதில்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் பேசியதாவது "பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். அதே நேரத்தில் தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலை வழங்குவதாக இங்கே பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்த பொழுது தமிழக முதல்வர் 05/11/2022 அன்று பால் கொள்முதல் விலை மூன்று ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் தமிழக அரசுக்கு நிதி சுமை அதிகரித்துள்ளது. சமீபத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பத்து ரூபாய் பால் உற்பத்தி விலையை உயர்த்தி கொடுத்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதனால் வெளி மாநில தனியார் பால் நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்வதற்காக விலையை உயர்த்தி வழங்கியுள்ளனர். எனினும் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்" என சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister explained milk purchase rate will be increase in TamilNadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->