32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிவாரணம் - அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
Minister Geethajeevan announces Rs 16 crore relief for 32,000 salt workers
தமிழகத்தில் உள்ள 32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.16 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பில், 6-வது தேசிய உப்பு மாநாடு தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய அவர்கூறியதாவது:உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதல் இடத்திலும், ராஜஸ்தான் மாநிலம் 2-வது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது என கூறினார் . மேலும் நாம் இரண்டாம் இடம் வரும் வகையில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேதாரண்யம் ஆகிய இடங்களில் உப்பு உற்பத்தி அதிகமாக நடைபெறுகிறது என அமைச்சர் பெ.கீதாஜீவன் கூறினார்.
மேலும் பேசிய அவர் ,உப்புத் தொழிலில் இளைஞர்களிடம் அதிக ஆர்வம் இல்லை என்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறிய அமைச்சர் பெ.கீதாஜீவன் உப்புத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி, 32 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என கூறினார் . மேலும் விபத்து, இயற்கை மரணம், திருமணம் போன்றவற்றுக்கு உப்பளத் தொழிலாளர்கள் அரசின் உதவிகளைப் பெறலாம் என்றும் அப்போது அமைச்சர் பெ.கீதாஜீவன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary
Minister Geethajeevan announces Rs 16 crore relief for 32,000 salt workers