திருமணமாகாத "பெண், பேத்தி" என்ற சொற்கள் நீக்கம்.."4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா".. புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, 

1) வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணையதளம் மூலம் வழங்கப்படும். ஏற்கனவே 25 வகையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் இணையவழியில் வழங்கப்பட்டு வருகிறது.

2) பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களுக்கு குடிசை தொழில் செய்ய ஏதுவாக பூமிதான நிலங்கள் வீட்டுமனைகளாக வழங்கப்படும்.

3) தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களையும் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு நிலச் சீர்திருத்த உச்சவரம்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பம் என்ற வரையறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் பொருட்டு "திருமணம் ஆகாத மகள்கள்" மற்றும் "திருமணம் ஆகாத பேத்திகள்" என்ற சொற்கள் நீக்கப்படும். 

4) இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிய புதிய செயலி உருவாக்கப்படும்.

5) தமிழ்நாட்டில் புதிதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையங்கள் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்படும்.

6) பேரிடர் காலங்களில் தடையற்ற தொலைதொடர்புக்கு 31 மாவட்டங்களில் டிஜிட்டல் ரிப்பீட்டர் மேம்படுத்தப்படும்.

7) கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் இடது கரை ரூபாய் 14.5 கோடியில் பலப்படுத்தப்படும்.

8) மயிலாடுதுறை, திருமயிலாடி, முதலை மேடு கிராமங்களில் 16 கோடியில் பேரிடர் மீட்பு மையம் அமைக்கப்படும்.

9) பேரிடர் முன்னறிவிப்பு குறித்து அறிய TN-alert மற்றும் TN-smart என்ற புதிய செயலிகள் ரூ.12.5 கோடி செயல்படுத்தப்படும்.

10) ஈரோடு தஞ்சை கரூர் திருப்பத்தூர் மாவட்டங்களில் 465 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.

11) முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு ஆய்வு மேற்கொண்டு விரைவில் மீண்டும் வழங்கப்படும்" என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister KKSSR Ramachandran issued new announcements


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->