கைது செய்யப்பட்ட செவிலியர்கள்., உரிய அனுமதி பெற்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் - அமைச்சர் மா சுப்ரமணியன்.!
minister ma subramaniyan say about nurse protest
கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டிருந்த 3,200 செவிலியர்களில் இருந்து 800 செவிலியர்கள் பணிநீக்கம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இன்று பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டனர். பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று செவிலியர்கள், தமிழக முதலைமைச்சர் ஸ்டாலினிற்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீசார்கள், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், செவிலியர் காலி பணியிடங்களில், பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று, அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், செவிலியர்கள் உரிய அனுமதி பெற்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
English Summary
minister ma subramaniyan say about nurse protest