கூடுதல் விலைக்கு மது .. "99% கட்டுக்குள்".. சொல்கிறார் அமைச்சர் முத்துசாமி.!!
Minister Muthuswamy said alcohol sale additional price restricted
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் மூலம் தமிழகத்தில் 4,000க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள் மூலம் தமிழக அரசு நேரடியாக மது விற்பனை செய்து வருமானம் ஈட்டிவருகிறது. கடந்த பட்ஜெட்டில் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
தமிழக அரசு வருமனைதை உயர்த்துவது போல டாஸ்மாக் ஊழியர்களும் தங்களின் வருமானத்தை உயர்த்திக்கொள்கின்றனர். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பதில் ஒன்றுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக குடிமகன்கள் குற்றம் சுமத்திவர அதன் அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வைத் துறை அமைச்சர் அமைச்சர் முத்துசாமி தமிழகத்தில் கூடுதல் விலைக்கும் மதுவிற்பது 99 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் விலைக்கு மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார்
English Summary
Minister Muthuswamy said alcohol sale additional price restricted