மாண்டஸ் புயல் : மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் பால் விநியோகம் - அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு.!
minister nasar visit ambatur aavin milk company
தமிழகத்தில் உருவான புயல் மழையால் பொதுமக்களுக்கு கிடைக்கும் ஆவின் பால் எந்த வித தடையும் இல்லாமல் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைச்சர் சா.மு.நாசர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
அதன் படி, ஆவின் பால் உற்பத்தி செய்யும் பால் பண்ணைகளில் உள்ள அதிகாரிகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்து பால் உற்பத்தியை தங்கு தடையின்றி உற்பத்தி செய்யவும் அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளை எந்தவிதமான தடையும் இல்லாமல் சென்று சேருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இதையடுத்து அனைத்து பால் பண்ணைகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். அந்தவகையில், அம்பத்தூர் பால் பண்ணையில் இரவு முழுவதும் இருந்து கண்காணித்து மேற்பார்வை செய்து அனைத்து நடவடிக்கைகளையும் செய்தார்.
அங்கு ஊழியர்களுடன் இணைந்து பண்ணையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டார். பின்னர், உரிய நேரத்தில் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தினார்.
இந்த புயல் நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் பால் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி அனைத்து மக்களுக்கும் பால் பாக்கெட்டுகள் கிடைக்கும்படியாக வழி வகை செய்தார். இதன் காரணமாக சென்னை மாநகரத்தில் எந்த ஒரு பகுதியிலும் பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை.
English Summary
minister nasar visit ambatur aavin milk company