17 மாவட்டங்களில் செங்கரும்பு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு...!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் இந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேட்டி, சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் செங்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் நேற்று முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட குளறுபடியால் இந்த ஆண்டு தரமான பொருட்கள் வழங்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை வரும் ஜனவரி 9ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தற்பொழுது தமிழக முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வாழ்வதற்கான பொருட்கள் 60 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றுள்ள நிலையில் ஓரிரு நாட்களில் 100% பொருட்கள் சென்று அடையும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் செங்கரும்பு தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்வதாக தெரிவித்துள்ளார். இதற்கான குழுக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைத்து கொள்முதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாக ரூ.33 என்ற அடிப்படை விலையில் செங்கரும்பு கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sakkarapani said sugarcane procurements in 17districts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->