கள்ளக்குறிச்சி: மொத்தம் 168 பேர் - அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திருநங்கை, பெண்கள்  உட்பட 168 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரை நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, "கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திருநங்கை, பெண்கள்  உட்பட 168 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து கூடுதல் மருத்துவர்கள் கள்ளக்குறிச்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்தும் சிலர் சிகிச்சைக்கு உடனடியாக வராமல் போனதே பாலி எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே,  அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலினும்பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்கப்படுகிறது

மேலும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister say Kallakurchi Kallasarayam total case 168


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->