கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு.!
minister sekar babu visit kilambakkam bus stand
சென்னை மற்றும் கோயம்பேடு பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை கடந்த 30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள் சேவை முழுவதுமாக செயல்பட தொடங்கியது.இருப்பினும் இந்த பிரம்மாண்ட பேருந்து நிலையத்தை பயன்படுத்துவதில் பயணிகளுக்கு பல சிரமங்கள் இருக்கின்றன.
அதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா?, வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தேவையான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வசதிகள், நடைபாதைகள் உள்ளிட்டவை முறையாக தூய்மை செய்யப்படுகிறதா? என்று பார்வையிட்டார்.
English Summary
minister sekar babu visit kilambakkam bus stand