கிளம்பாக்கத்திலிருந்து கோயம்பேட்டுக்கு பேருந்துகள் செல்லுமா? - அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்.!
minister sivasangar explain of buys service start kilambakkam to koyambedu
சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் வாகன நெரிசல் குறைவதற்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழகத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளின் விவரங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது:- "அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும்.
ஆனால், நாளை முதல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அதுமட்டுமல்லாமல், கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேட்டிற்கு மாநகரப் பேருந்துகளும் இயக்கப்படும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவு வரையில் மட்டுமே கோயம்பேட்டிற்கு வரும்.
அதன் பிறகு வருகின்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற்றப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லாது. பெங்களூரு, கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும். பொங்கல் வரை விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆறு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வந்து அதன் பிறகு அந்தந்த வழித்தடத்தில் இயங்கும்.
பொங்கலுக்கான ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவுகள் முடிந்துவிட்டதால், ஆம்னி பேருந்துகள் பொங்கல் வரை மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். அதற்கு பிறகு ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் ' என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister sivasangar explain of buys service start kilambakkam to koyambedu